திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகிய ரஜிப் பானர்ஜி உள்ளிட்ட 5 தலைவர்கள் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான அரசு மீது அதிருப்தி கொண்ட அந்த 5 தலைவர்களும் மாநிலத்தில் பாஜகவிற்கு உழைக்க உறுதியளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜிப் பானர்ஜி, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் தொழில்கள் இல்லாமல் இளைஞர்கள் விரக்திக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். பாஜக ஆட்சியமைத்தால் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தும் என்றும் ரஜிப் பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments