Ticker

6/recent/ticker-posts

Ad Code

தேனியில் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தேனி மாவட்டம் கம்பம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு க.புதுப்பட்டியைச் சேர்ந்த 61 வயதான மனோகரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் தீர்ப்புக்கூறிய நீதிபதி, முதியவருக்கு 10 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments