மலேசியாவில் வளர்ப்பு மகளிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. கணவனிடம் விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், இரண்டாவதாக வேறு ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். அந்த நபர் தனது மனைவியின் பன்னிரண்டு வயது மகளிடம் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments