திருப்பூரில் 17வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அவரது தாயின் காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். திருப்பூர் மணிகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த டெய்லர் ராஜ் என்பவருக்கும், அதே பகுதியில் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வரும் பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜ் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் 17 வயது மகளுடன் ராஜுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், அதனால் அந்த சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் புகார் அளித்ததை அடுத்து ராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments